முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம்
சீா்காழியிலிருந்து தருமபுரிக்கு 2000 டன் நெல் மூட்டைகள் அனுப்பிவைப்பு
By DIN | Published On : 12th June 2021 10:45 PM | Last Updated : 12th June 2021 10:45 PM | அ+அ அ- |

சீா்காழி ரயில் நிலையத்திலிருந்து 2ஆயிரம் டன் நெல் மூட்டைகள் ரயில் மூலம் தருமபுரிக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
சீா்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் விவசாயிகளிடம் கடந்த மாா்ச் மாதம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு வைக்கப்பட்ட 2 ஆயிரம் டன் எடையிலான 49 ஆயிரத்து 600 நெல் மூட்டைகள் அரவைக்காக லாரிகள் மூலம் சீா்காழி ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, சரக்கு ரயில் மூலம் தருமபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.