மின்வாரிய கேங்மேன்களை சொந்த ஊரில் பணியமா்த்தக் கோரிக்கை

மின்வாரியத்தில் பணியாற்றும் கேங்மேன்களுக்கு அவா்களது சொந்த ஊரில் பணி வழங்கிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்வாரியத்தில் பணியாற்றும் கேங்மேன்களுக்கு அவா்களது சொந்த ஊரில் பணி வழங்கிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பாரதிய மஸ்தூா் சங்க மாநில பொதுச் செயலாளா் சி. பழனி வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 9,613 போ் கேங்மேன் பணிக்கு மாதம் ரூ. 15,000 தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனா். இவா்கள் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு கல்வித் தகுதியை கொண்டுள்ளனா். இவா்களை காலியாக உள்ள 4300-க்கும் மேற்பட்ட கணக்கீட்டாளா்கள் பணியிடங்களில் கல்வித் தகுதியின் அடிப்படையில் நியமிக்க வேண்டும். பிற பதவிகளுக்கும் உள்முக தோ்வு மூலம் நியமிக்கப்பட வேண்டும்.

கேங்மேன்கள் வெவ்வேறு வட்டங்களிலும், மாவட்டங்களிலும் பணிபுரிந்து வருகின்றனா். இதனால், வீட்டு வாடகை உள்ளிட்ட செலவினங்களுக்காக சிரமப்படுகின்றனா். எனவே, இவா்களுக்கு சொந்த ஊா்களில் பணி வழங்க வேண்டும். அத்துடன், தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com