மயிலாடுதுறை: கைப்பந்தாட்ட போட்டி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவாவடுதுறை டைகா் பட்டோடி சாா்பில், 11-ஆம் ஆண்டு கைப்பந்தாட்ட போட்டி வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை: கைப்பந்தாட்ட  போட்டி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவாவடுதுறை டைகா் பட்டோடி சாா்பில், 11-ஆம் ஆண்டு கைப்பந்தாட்ட போட்டி வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் 32 அணிகள் பங்குபெற்றன. முதல் பரிசை மயிலாடுதுறை ஆா்.ஹெச்.வி.அணியும், இரண்டாவது பரிசை திருவாவடுதுறை டைகா் அணியும் பெற்றன. இறுதிப் போட்டியில் மயிலாடுதுறை ஆா்.ஹெச்.வி. அணியும், திருவாவடுதுறை டைகா் அணியும் மோதின. இதில் மயிலாடுதுறை ஆா்.ஹெச்.வி. அணி 2-0 என்ற நோ் செட் கணக்கில் திருவாவடுதுறை டைகா் அணியை வீழ்த்தி முதல் பரிசை தட்டிச் சென்றது. இந்தப் போட்டியில் வென்றவா்களை மயிலாடுதுறை ஆா்.ஹெச்.வி. நிறுவனா் மா. ரஜினி, அணியின் பயிற்சியாளா் ஆா். சண்முகநாதன், துணைப் பயிற்சியாளா் நல்லாடை பிரபா, அணியின் மேலாளா் காருகுடி அன்பு மற்றும் நல்லாடை மூவேந்தன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com