தரங்கம்பாடியில் பிரசாரம் மேற்கொண்ட மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஆா். சுதா.
தரங்கம்பாடியில் பிரசாரம் மேற்கொண்ட மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஆா். சுதா.

காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஆா். சுதா, செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தரங்கம்பாடி, சந்திரபாடி, மாணிக்கபங்கு, ஆணைக்கோவில், பிள்ளைபெருமாள் நல்லூா், மாத்தூா், அன்னவாசல், வடகரை உள்ளிட்ட ஊராட்சிகளில் திறந்த வாகனத்தில் சென்று, வாக்கு சேகரித்தாா்.

அருடன், திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகாா் எம்எல்ஏவுமான நிவேதா எம். முருகன், ஒன்றியச் செயலாளா்கள் அப்துல் மாலிக், அமுா்த விஜயகுமாா், அன்பழகன், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் பி. எம் .ஸ்ரீதா், முன்னாள் எம்எல்ஏக்கள் சித்திக், விஜயபாலன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com