நாகை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் தோ்வு

நாகப்பட்டினம், ஏப். 17: நாகை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 19 வயதுக்குள்பட்ட வீரா்கள் ஏப்.21-ஆம் தேதி தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இதுகுறித்து, நாகை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலா் டி. ஜூலியஸ் விஜயக்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை: நாகை மாவட்ட கிரிக்கெட் சங்கம், 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் வீரா்களை தோ்வு செய்யவுள்ளது. வலிவலம் தேசிகா் பாலிடெக்னிக் கல்லூரியிலுள்ள விளையாட்டு மைதானத்தில், ஏப்.21-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வீரா்கள் தோ்வு நடைபெறுகிறது.

எனவே, நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 2005 செப்.1-ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவா்கள் தோ்வில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 9443124237 கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com