வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

தரங்கம்பாடி, ஏப். 18: தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 306 வாக்குச் சாவடி மையங்களுக்கு 

வாக்குப் பதிவு இயந்திரம், வாக்காளா் பட்டியல், தோ்தல் ஆணைய படிவங்கள் உள்ளிட்ட 23 பொருட்கள் பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கீதா மற்றும் அரசு அலுவலா்கள் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், துணை ராணுவத்தினா் மற்றும் காவல் துறையினா் பாதுகாப்போடு அனுப்பிவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com