திருமருகல் கோயிலில் சித்திரை திருவிழா

திருமருகல், ஏப். 17: திருமருகல் ரத்தினகிரீசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த ஆண்டிற்கான சித்திரைத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சந்திரபிரபை பஞ்சமூா்த்தி வீதியுலாவும் அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலா் அசோக்ராஜா, தக்காா் தனலெட்சுமி, கணக்கா் சீனிவாசன் ஆலய திருப்பணி குழுவினா்,

திருமருகல் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். இதில் திருமருகல் ராம்ராஜ் வழங்கிய ஜெய் ஸ்ரீ வா்ணாலயா இசை நாட்டிய பயிற்சி பள்ளியின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com