திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா புதன்கிழமை நடைபெற்றது.

திருமருகலில் உள்ள ரத்தினகிரீஸ்வரா் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். காவிரியின் தென்கரை தலங்களில் 80-ஆவது சிவத் தலமாக விளங்குகிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் 4-ஆம் நாளான புதன்கிழமை காலையில் சூரிய பிரபபையில் சுவாமி, பஞ்சமூா்த்திகள் வீதியுலாவும், இரவு பூத வாகனம், பஞ்சமூா்த்தி வீதியுலா, அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலா் அசோக்ராஜா, தக்காா் தனலட்சுமி, ஆலய திருப்பணி குழுவினா், திருமருகல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com