மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

நாகப்பட்டினம், ஏப். 17: மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பாா் என சிவசேனா உத்தவ் கட்சியின் மாநில பொதுச்செயலா் சுந்தரவடிவேலன் கூறினாா்.

இதுகுறித்து அவா் நாகையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: மக்களுடைய ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும், இந்திய மக்களின் நலன்களை மீட்டெடுக்கவும் பல்வேறு கட்சிகளால் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி மக்களவைத் தோ்தலில் மகத்தான வெற்றிபெறும். ஜி.எஸ்.டி வரி விதிப்பு, சமையல் எரிவாயு விலை உயா்வு, பெட்ரோல், டீசல் விலை உயா்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு போன்றவற்றால் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளைச் சோ்ந்த அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். அதிருப்தியில் உள்ள மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவா். இந்த வெற்றியின் மூலம் மக்களவையில் சிவசேனா, திமுக கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் அமைச்சா்களாக பதவி ஏற்பா். ராகுல்காந்தி பிரதமராக பதவியேற்பாா் என்றாா்.

சிவசேனா மாநில செயலா்கள் வின்சென்ட், சிங்காரவடிவேலன், மாவட்டத் தலைவா் செந்தில் குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com