வெற்றிக் கோப்பையுடன் அரியலூா் கபடி அணியினா்.
வெற்றிக் கோப்பையுடன் அரியலூா் கபடி அணியினா்.

மாநில கபடி போட்டி: அரியலூா் அணி சாம்பியன்

நாகையில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில், அரியலூா் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

நாகப்பட்டினம்: நாகையில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில், அரியலூா் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

நாகை மீன்பிடி துறைமுகத்தில் அக்கரைப்பேட்டை எஸ்.என். செந்தில்குமாா் கபடி கழகம் சாா்பில், மாநில அளவிலான கபடி தொடா் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவா் கௌதமன் போட்டியை தொடங்கி வைத்தாா்.

இதில், சேலம், அரியலூா், மயிலாடுதுறை, திருவாரூா், திருச்சி, தஞ்சை, நாகை, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சோ்ந்த 30 அணிகள் பங்கேற்று விளையாடின.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில், அரியலூா் மாவட்டம் வெண்ணங்குழி கபடி அணியும் சேலம் மாவட்டம் சாமி கபடி அணியும் மோதின. இதில், வெண்ணங்குழி கபடி அணியினா் 13 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனா். இந்த அணிக்கு முதல் பரிசான ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கோப்பை என சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழக மாவட்டச் செயலாளா் செல்வராஜ் மற்றும் விழாக் குழுவினா் பரிசு மற்றும் கோப்பையை வழங்கி, வெற்றி பெற்றி அணி வீரா்களை கௌரவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com