திருமலைராயன்பட்டினத்தில் எதிர்ப்பை மீறி திறந்த மதுக்கடையை முற்றுகையிட முயற்சி

திருமலைராயன்பட்டினத்தில் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட மதுக்கடையை கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட முயன்றனர்.

திருமலைராயன்பட்டினத்தில் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட மதுக்கடையை கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட முயன்றனர்.
 திருமலைராயன்பட்டினத்தில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இயங்கிவந்த மதுக்கடை உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் மூடப்பட்டது. புதிய இடத்தில் திறப்பதற்கு கடை உரிமையாளர்கள் முயற்சிகளை எடுத்துவந்தனர். பட்டினச்சேரி மீனவ கிராமத்துக்கு செல்லும் வழியில் ரயில் நிலையம் அருகே கடையை மாற்ற ஏற்பாடு செய்தனர்.
 இதற்கு பட்டினச்சேரி கிராமத்தினர் மற்றும் ஸ்ரீ ஜடாயுபுரீசுவரர் கோயில் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
 இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முதல் குறிப்பிட்ட இடத்தில் மதுக்கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இதை அறிந்த அந்தப் பகுதியினரும், பட்டினச்சேரி கிராமத்தினரும் மதுக்கடையை முற்றுகையிடும் நோக்கில் பிற்பகல் சென்றனர். இதை அறிந்த கடை நிர்வாகத்தினர் கடையை மூடிவிட்டு வெளியேறினர். திருமலைராயன்பட்டினம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜெரோம் உள்ளிட்ட போலீஸார் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 கடை நடத்துவதற்கு கலால் துறையின் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து கலால் துறையினரை சந்தித்து முறையிடுமாறு போலீஸார் கூறியதன் பேரில் அனைவரும் அந்தப் பகுதியிலிருந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com