மாசி மக தீர்த்தவாரிய் திருமலைராயன்பட்டினத்தில் துணை ஆட்சியர் ஆய்வு

மாசி மக தீர்த்தவாரி நடைபெறக்கூடிய திருமலைராயன்பட்டினம் பகுதியில் மாவட்ட துணை ஆட்சியர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

மாசி மக தீர்த்தவாரி நடைபெறக்கூடிய திருமலைராயன்பட்டினம் பகுதியில் மாவட்ட துணை ஆட்சியர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
திருமலைராயன்பட்டினம் பகுதி பட்டினச்சேரி கடற்கரையில் திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் இருந்து சுவாமிகள் செவ்வாய்க்கிழமை (பிப்.19) பிற்பகல் எழுந்தருளி மாசி மக தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. அதிகாலை முதல் பகல் 12 மணி வரை கடற்கரை மணல் பரப்பில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். இரண்டு நிகழ்ச்சிகளிலும் ஏராளமானோர் பங்கேற்பர் என்பதால் கடற்கரை சாலை முதல் பட்டினச்சேரி பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும். இதில், சுவாமிகள் தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். விழாவுக்கான முன்னேற்பாடுகளை நேரில் அறியும் வகையில் மாவட்ட துணை ஆட்சியர் எம். ஆதர்ஷ் திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் பார்வையிட்டார். 
திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜான் அரேலியஸ், காவல் ஆய்வாளர் மேரி கிறிஸ்டின்பால் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், மேலையூர் முதல் வெள்ளை மண்டபம் மற்றும் சுவாமிகள் பட்டினச்சேரிக்கு எழுந்தருளும் வீதிகளில் செய்துள்ள தூய்மைப் பணி, மின் விளக்குகள் சீரமைப்புப் பணி உள்ளிட்டவற்றை விளக்கினர்.
பக்தர்களுக்கு செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றை காவல் ஆய்வாளர் விளக்கிக் கூறினார்.
தூய்மைப் பணியை தீவிரமாக மேற்கொள்ளுமாறு துணை ஆட்சியர் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு அறிவுறுத்தினார். பக்தர்கள் செல்லக்கூடிய சாலையில் மின் விளக்குகள் பழுதின்றி இருக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com