காஷ்மீர் விவகாரம் குறித்த புத்தகம்  வழங்கல்

சம்பர்க் அபியான் என்கிற திட்டத்தின்படி, முக்கிய பிரமுகர்களை சந்தித்து, காஷ்மீர் விவகாரம் குறித்த புத்தகத்தை முன்னாள் எம்பி சி.பி. ராதாகிருஷ்ணன் வழங்கினார்.


சம்பர்க் அபியான் என்கிற திட்டத்தின்படி, முக்கிய பிரமுகர்களை சந்தித்து, காஷ்மீர் விவகாரம் குறித்த புத்தகத்தை முன்னாள் எம்பி சி.பி. ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து அரசியல் கட்சியினர், முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து விளக்கும் வகையில் வியாழக்கிழமை காரைக்காலில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய கயிறு வாரியத் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசினார். 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சம்பர்க் அபியான் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து, காஷ்மீரில் 370 மற்றும் 35 ஏ சட்டப் பிரிவு நீக்கம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் எழுதப்பட்ட புத்தகத்தை வழங்கினார்.
காரைக்காலில் அமமுக மாவட்டச் செயலர் ஜி.வி.ஜெயபால், கல்லூரி பேராசிரியர் ரங்கையன், முன்னாள் சார் பதிவாளர் ராசப்பா, என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், சேம்பர் ஆஃப் காமர்ஸ் முன்னாள் தலைவருமான வி.ஆனந்தன், இயற்கை விவசாயியான டி.கே.எஸ்.எம். கனகசுந்தரம் ஆகியோரிடம் புத்தகத்தை சி.பி. ராதாகிருஷ்ணன்  நேரில் வழங்கினார்.
இந்த நிகழ்வில் பாஜக மாவட்டத் தலைவர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், மாநில விவசாய அணித் தலைவர் எஸ். இளங்கோவன், மாநில ஓபிசி அணி தலைவர் துரைசேனாதிபதி உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
காஷ்மீரில் சிறப்புச் சட்டப் பிரிவு நீக்கத்துக்கு முன்பு நிலவி வந்த சூழல்,  சிறப்புச் சட்டப்பிரிவு நீக்கத்தால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து மக்களிடையே புரிதல் ஏற்படும் வகையில், சம்பர்க் அபியான் என்கிற திட்டத்தை பாஜக நாடு முழுவதும் நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக காரைக்காலில் 2 நாள்கள் நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக பாஜகவினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com