தேர்தல் ஆணையம் கூறிய ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்: தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல் 

வாக்குச் சாவடிக்கு செல்லும்போது பூத் சிலிப்புடன் தேர்தல் ஆணையம் கூறிய ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும் என தேர்தல் அதிகாரி ஏ. விக்ரந்த் ராஜா அறிவுறுத்தியுள்ளார்.


வாக்குச் சாவடிக்கு செல்லும்போது பூத் சிலிப்புடன் தேர்தல் ஆணையம் கூறிய ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும் என தேர்தல் அதிகாரி ஏ. விக்ரந்த் ராஜா அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்களவைத் தேர்தல் வியாழக்கிழமை (ஏப்ரல் 18) நடைபெறவுள்ளது. காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். மாலை 6 மணிக்கு முன் வாக்குச் சாவடியை வந்தடைந்த வாக்காளர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு, 6 மணிக்கு மேலும் வாக்களிக்க வசதி செய்யப்படும்.
வாக்காளர்கள், வாக்குச் சாவடி நிலை அதிகாரியால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள ரசீது எடுத்துச் செல்வதோடு, கட்டாயமாக தங்களது வாக்காளர் அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணமான ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், ஆதார் அட்டை, புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசால் வழங்கப்பட்ட பணியாளர் அடையாள அட்டை, பான் கார்டு, புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம், என்.பி.ஆர். மூலம் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, 100 நாள் வேலை திட்ட அட்டை, மருத்துவக் காப்பீட்டு அட்டை, எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி. ஆகியோருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஓய்வூதிய புத்தகம் இவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு செல்லவேண்டும். பூத் சிலிப் இல்லாதவர்கள் வாக்குச் சாவடியில் இருக்கும் உதவி மையத்தில் உள்ள வாக்குச் சாவடி நிலை அதிகாரிகளிடம் தங்களின் முகவரியை கூறி, வாக்காளர் பட்டியலில் தங்களின் வரிசை எண்ணை தெரிந்துகொண்டு செல்ல வேண்டும்.
வெயிலின் தாக்கத்தையொட்டி வாக்காளர்கள்
வசதிக்காக நிழல் இல்லாத வாக்குச் சாவடிகளில், தற்காலிக பந்தல் வசதி மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வாக்களிக்க தன்னார்வலர்கள் உதவி மற்றும் சக்கர நாற்காலிகள் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் நேர்மையான முறையில் வாக்களித்து ஜனநாயக மாண்பை நிலை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com