ஆடிப் பெருக்கு வழிபாடு: காரைக்காலில் பேரிக்காய் வியாபாரம் மும்முரம்

ஆடிப்பெருக்கு வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய பழவகைகளில் ஒன்றான பேரிக்காய், காரைக்கால்

ஆடிப்பெருக்கு வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய பழவகைகளில் ஒன்றான பேரிக்காய், காரைக்கால் சந்தையில் கொடைக்கானலில் இருந்து வரவழைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்படுகின்றன. 
ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர். காவிரித் தாயை வணங்கும் விதமாக காவிரித் தண்ணீருக்கு நீர்நிலைகளில் பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்விழாவில் பெண்கள், குறிப்பாக அண்மையில் திருமணம் செய்துகொண்டோர் தம்பதிகளாக கலந்துகொண்டு பூஜை செய்வர்.
இந்த வழிபாடு சனிக்கிழமை (ஆக.3) நடைபெறவுள்ளது. காரைக்கால் மாவட்டம், கடைமடைப் பகுதியாக இருப்பதால் ஆடிப்பெருக்கு நாளின்போது காவிரித் தண்ணீர் வரத்து என்பது இல்லாத நிலையே பல ஆண்டுகளாக தொடர்கிறது.  நிகழாண்டும் இதே நிலை நீடிக்கிறது. அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. ஒரு சில குளங்களிலும், கடைமடை அணை உள்ள ஆறுகளிலும் தண்ணீர் தேங்கியிருக்கின்றன. இவற்றில் ஆடிப்பெருக்கு கொண்டாடும் விதத்தில் மக்கள் தயாராகிவருகின்றனர். இதற்கான வழிபாட்டுக்குரிய பொருள்களை சந்தையில் வாங்குவதற்கு மக்கள் வெள்ளிக்கிழமை ஆர்வமாக ஈடுபட்டர். முக்கியமாக வழிபாட்டில் பேரிக்காய், விளாம்பழம், கொய்யா உள்ளிட்டவை இடம்பெறும். இதற்காக காரைக்கால் பகுதியில் பல்வேறு இடங்களில் பேரிக்காய், விளாம்பழம், கொய்யா உள்ளிட்ட பழ வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 
இதுகுறித்து, வியாபாரிகள் கூறியது: கொடைக்கானல்  பகுதியில் விளைவிக்கப்படும் பேரிக்காய் தாராளமாக காரைக்காலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் பண்ருட்டி பகுதியிலிருந்து பேரிக்காய் வரத்து உள்ளது.  
பேரிக்காய் கிலோ ரூ. 60-க்கும்,  விளாம்பழம் கிலோ ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்றனர். கொய்யாப்பழம் வரத்தும் அதிகமிருக்கிறது.  நகரின் பல இடங்களில் தள்ளு வண்டிகளில் பேரிக்காய், கொய்யா, விளாம்பழம் உள்ளிட்டவை வியாபாரம் செய்யப்படுகிறது. மக்கள் ஆர்வத்துடன் இவற்றை வாங்கிச்செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com