ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி

காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்துக்கு சென்ற ரயிலில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஓவியப்போட்டி ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்துக்கு சென்ற ரயிலில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஓவியப்போட்டி ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.
புதுவை திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் காரைக்காலில் இருந்து புறப்பட்ட திருச்சி பயணிகள் ரயிலில் ஓவியப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் முன்பதிவு செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.  4 முதல் 7-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வண்ணம் தீட்டுதல், 8 மற்றும் 9 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "தூய்மையான இந்தியா', "மழை நீர் சேகரிப்பு' ஆகிய தலைப்புகளில் ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்றனர். ரயில் நாகப்பட்டினம் செல்லும் வரை போட்டி நடைபெற்றது.
சிறப்பான வகையில் வண்ணம் தீட்டிய, ஓவியம் வரைந்த மாணவர்களுக்கான பரிசுகளும், சான்றிதழ்களும் பின்னர் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். புதுவை திருவள்ளுவர் கலைக்கூட நிறுவனரும், ஓவியருமான எஸ்.சிவக்குமார், ஓவிய ஆசிரியர் லட்சுமணன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் எஸ்.அசோகன் மற்றும் திவ்யா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com