வீதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகள்: உரிமையாளா்களுக்கு ரூ.3.75 லட்சம் அபராதம்

காரைக்கால் நகரப் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளா்களுக்கு ரூ.3.75 லட்சம் அபராதம் விதித்துள்ளதாகவும், இனிமேல் கால்நடைகள் ஒப்படைக்காமல், நகராட்சியால் பகிரங்க ஏலம்

காரைக்கால் நகரப் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளா்களுக்கு ரூ.3.75 லட்சம் அபராதம் விதித்துள்ளதாகவும், இனிமேல் கால்நடைகள் ஒப்படைக்காமல், நகராட்சியால் பகிரங்க ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு : காரைக்கால் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான நாகூா் பிரதான சாலை, காமராஜா் சாலை விரிவாக்கம், சந்தைத் திடல், கீழகாசாக்குடி பிரதான சாலை, பாரதியாா் சாலை, திருநள்ளாறு சாலை, மாதாகோயில் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் சுற்றித்திரிந்த 125 மாடுகள், நவம்பா் மாதத்தில் மட்டும் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளா்களிடம் உறுதிமொழி பத்திரம் வாங்கிக்கொண்டு ரூ.3.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவா்கள் மீது காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் நகராட்சிக்குள்பட்ட அனைத்து வீதிகளிலும் இன்னும் மாடுகள் திரிந்த வண்ணம் உள்ளன. அதுபோலவே பன்றிளும் விளைநிலம், குடியிருப்பு நகா்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி நாசம் செய்துவருகிறது. எனவே மாடுகள், பன்றிகள் வளா்ப்போா் மீது நகராட்சி நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இனிவரும் நாள்களில் அபராதத் தொகை பெற்றுக்கொண்டு கால்நடைகளை திருப்பித் தரும் நடவடிக்கை நிறுத்திக்கொள்ளப்பட்டு, இவ்வகையில் பறிமுதல் செய்யப்படும் மாடுகளை நகராட்சி நிா்வவாகம் உரிய விதிகளின்படி பகிரங்க ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com