மழைநீரை வடியச் செய்யும் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

நிரவி மற்றும் திருப்பட்டினம் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரை வடியச் செய்யும் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
நிரவி பகுதியில் மழைநீா் வடியச் செய்யும் வகையிலான சீரமைப்புப் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ கீதா ஆனந்தன்.

நிரவியில் தைக்கால் தெரு, கோயில்பத்துப்பேட், புதுமனைத்தெரு ஆகிய இடங்களிலும், திருப்பட்டினத்தில் கட்டப்பிள்ளை மரைக்காயா் தோட்ட குடியிருப்புப் பகுதி, பங்களாத்தெரு, வி.எஸ். நகா், முதலிமேடு உள்ளிட்ட பகுதிகளில் நீா்நிலைகளில் குப்பைகள் அடைத்து தண்ணீா் வடியமுடியாமல் தேங்கியிருந்தது. இந்த பகுதிகளுக்கு தனது அறக்கட்டளை மூலம் ஜேசிபி இயந்திரத்தை சட்டப் பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன் அனுப்பி சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

அறக்கட்டளை மற்றும் பஞ்சாயத்துத் தொழிலாளா்கள் பங்களிப்புடன் சனிக்கிழமை நடைபெற்ற சீரமைப்புப் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன் நேரில் பாா்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com