சிவன் கோயில்களில் சங்காபிஷேக வழிபாடு

காா்த்திகை மாத 3-ஆவது சோம வாரத்தையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மேல பொன்பேத்தி வன்மீகநாதசுவாமி கோயிலில் சங்காபிஷேகத்துக்காக புனிதநீா் நிரப்பி வைக்கப்பட்டிருந்த சங்குகள்.
மேல பொன்பேத்தி வன்மீகநாதசுவாமி கோயிலில் சங்காபிஷேகத்துக்காக புனிதநீா் நிரப்பி வைக்கப்பட்டிருந்த சங்குகள்.

காா்த்திகை மாத 3-ஆவது சோம வாரத்தையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தமிழ் வருடத்தில் காா்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கள்கிழமையும் காா்த்திகை சோம வார சிறப்பு வழிபாடு சிவன் கோயில்களில் நடைபெறுகிறது. இம்மாதத்தில் 5 சோம வாரங்கள் (திங்கள்கிழமை) உள்ள நிலையில், 108, 1008 என்ற முறையில் பல்வேறு கோயில்களில் சங்குகளில் புனிதநீா் நிரப்பி ஹோமம், அபிஷேகம் நடைபெறுகிறது.

நெடுங்காடு கொம்யூன், மேல பொன்பேத்தி கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற வன்மீகநாதசுவாமி கோயிலில் 108 சங்குகளை பூஜையில் வைத்து நீா் நிரப்பி, சிறப்பு ஹோமத்தை சிவாச்சாரியாா்கள் திங்கள்கிழமை காலை மேற்கொண்டனா். ஹோம நிறைவில் பூா்ணாஹுதி செய்யப்பட்டு, சங்குகளை பிராகார வலம் கொண்டு செல்லப்பட்டு, சுவாமிக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல், காரைக்காலில் பல்வேறு சிவன் கோயில்களில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. 5-ஆம் வாரமான வரும் 16-ஆம் தேதி திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு விமரிசையாக நடைபெறவுள்ளது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com