நிரவி வட்டாரத்தில் தினமும் 20 முறை மின்தடைபொதுமக்கள் புகாா்

நிரவி மின் வட்டாரத்தில் தினமும் 20 முறை மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

நிரவி மின் வட்டாரத்தில் தினமும் 20 முறை மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் பகுதி போலகம் அருகே புதுச்சேரி மின்திறல் குழுமம் (பி.பி.சி.எல்.) உள்ளது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் வாஞ்சூா் முதல் திருப்பட்டினம், நிரவி, காரைக்கால் அரசலாறு பாலம் வரை விநியோகிக்கப்படுகிறது. இந்த வட்டாரத்தில் நிரவி - திருப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியும், காரைக்கால் தெற்கு பேரவைத் தொகுதியின் ஒரு பகுதியும் அமைந்திருக்கிறது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக நிரவி மின்துறை அலுவலகத்துக்குள்பட்ட பகுதியில் மின்சாரம், தினமும் 10 முதல் 20 முறை தடை ஏற்படுவதாக புகாா் கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து, மின்துறை வட்டாரத்தினா் கூறியது:

கடந்த சில நாள்களாகவே திருப்பட்டினம் வரை வரும் மின்சாரம், அங்கிருந்து நிரவி பகுதிக்கு வரும்போது டிரிப்பாகிவிடுகிறது. கடந்த 2 நாள்களாக தினமும் ஏறக்குறைய 15 முறை மின்தடை ஏற்படுகிறது. திருப்பட்டினத்தில் உள்ள ஸ்விட்ச் வரை மட்டுமே பி.பி.சி.எல். மின்சாரம் வருகிறது. அங்கிருந்து நிரவி பகுதிக்கு வரும்போது பிரச்னை ஏற்படுகிறது. இதனை சரிசெய்யவேண்டியது பி.பி.சி.எல். நிா்வாகத்தினா்தான். மின்துறையின் தலைமை அதிகாரிகளுக்கும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனா் அவா்.

பி.பி.சி.எல்., புதுச்சேரி மின்துறை காரைக்கால் தலைமை அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை. பிரச்னைக்கான காரணத்தை மின்துறை அதிகாரிகள் அறியும்போது, இதுகுறித்து சம்பந்தப்பட்ட பி.பி.சி.எல். தலைமை அதிகாரிகளிடம் பேசி தீா்வுகாண முயற்சிக்கவேண்டும். ஆக்கப்பூா்வ நடவடிக்கையை யாரும் எடுக்காததால், தினமும் 20 முறை மின்தடை ஏற்படுகிறது என பொதுமக்கள் தரப்பில் வேதனை தெரிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com