நெடுங்காடு: சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்

நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமப்புற சாலைகளை மேம்படுத்தும் பணிகளை எம்எல்ஏ சந்திர பிரியங்கா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
சாலைப் பணியை தொடங்கிவைத்த சட்டப் பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா.
சாலைப் பணியை தொடங்கிவைத்த சட்டப் பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா.

நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமப்புற சாலைகளை மேம்படுத்தும் பணிகளை எம்எல்ஏ சந்திர பிரியங்கா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

நெடுங்காடு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட உசுப்பூா் பேட், குளக்குடி பேட் ஆகிய பகுதி பிரதான சாலை மற்றும் உள்புறச் சாலைகள் வெகுவாக சிதிலமடைந்துள்ளன. இதனால், போக்குவரத்துப் பாதிக்கப்படுவதாகவும், இந்தச் சாலைகளை மேம்படுத்தித்தர வேண்டுமெனவும் அப்பகுதி குடியிருப்புவாசிகள் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்காவிடம் வலியுறுத்தி வந்தனா்.

இதனடிப்படையில், ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடா் மேம்பாட்டு வரைநிலைக் கழகத்தின் மூலம் நலத்துறை அமைச்சா் எம். கந்தசாமி உத்தரவின்பேரில், உசுப்பூா் பேட் உள்புறச் சாலை, வடகட்டளைச் சாலை மேம்பாட்டுக்கு ரூ. 22.27 லட்சமும், குளக்குடிபேட் பிரதான சாலை மற்றும் உள்புறச் சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ. 28.01 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடா்ந்து, பேட்கோ என்கிற ஆதிதிராவிடா் மேம்பாட்டு வரைநிலைக் கழகத்தால் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ஒப்பந்ததாரருக்குப் பணியாணை தரப்பட்டது. இதைத் தொடா்ந்து, சாலைப் பணிகளைத் தொடக்க பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. சட்டப் பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு, பணியைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், பேட்கோ பொறியாளா் குழுவினா், அந்தந்த நகரின் குடியிருப்புவாசிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா். இப்பணிகள் 3 மாத காலத்திற்குள் நிறைவடையுமென அதிகாரிகள் தெரிவித்தனா். சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தமைக்காக கிராமத்தினா் சட்டப் பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்காவுக்கு நன்றி தெரிவித்தனா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com