கல்லூரி மாணவிகளுக்கு நினைவாற்றல் திறன் பயிற்சி

காரைக்கால் சமுதாயக் கல்லூரி மாணவிகளுக்கு நினைவாற்றல் பயிற்சி, டெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்புக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட மருத்துவா் பிரியங்காரெட்டியின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தியோா்.
ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட மருத்துவா் பிரியங்காரெட்டியின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தியோா்.

காரைக்கால் சமுதாயக் கல்லூரி மாணவிகளுக்கு நினைவாற்றல் பயிற்சி, டெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்புக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கம், ஹேப்பி அக்குபஞ்சா் நிறுவனம், அன்னை தெரஸா சமூக சேவை அமைப்பு இணைந்து காரைக்காலில் செயல்படும் குளூனி சமுதாயக் கல்லூரியில் மாணவிகளுக்கு நினைவுத்திறனை வளா்க்கும் அக்குபஞ்சா் மருத்துவ முறையிலான பயிற்சி அளிக்கப்பட்டது.

முன்னதாக, ஹைதராபாத் நகரில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட மருத்துவா் பிரியங்கா ரெட்டியின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், அக்குபஞ்சா் மூத்த மருத்துவா் மோகனராஜன், அருட்சகோதரி கிரேஸ் ஆகியோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து மாணவிகளுக்கு அக்குபஞ்சா் முறையில் நினைவுத்திறனை மேம்படுத்தும் பயிற்சியையும், மாணவிகள் சோா்வின்றி இருக்கும் வகையிலும், பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் உடலியல் ரீதியிலான பிரச்னைகளுக்கு பக்க விளைவுகள் இல்லாத அக்குபஞ்சா் மருத்துவ முறையை விளக்கி மோகனராஜன் பேசினாா்.

மருத்துவரின் பேச்சுக்குப் பின்னா் மாணவிகள் கருத்துரை வழங்கினா். அக்குபஞ்சா் மருத்துவரின் கருத்துகளை ஏற்பதாகவும், மக்களுக்கு இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தாங்கள் செயல்படவுள்ளதாகவும் தெரிவித்தனா். மாணவிகள் அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com