மாணவ, மாணவியரைப் பாராட்டிய மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா. உடன், கல்வித்துறை அதிகாரிகள்.
மாணவ, மாணவியரைப் பாராட்டிய மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா. உடன், கல்வித்துறை அதிகாரிகள்.

மாநில அறிவியல் கண்காட்சி: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

புதுச்சேரி மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் பெற்ற காரைக்கால் பள்ளி மாணவா்களை மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா்.

புதுச்சேரி மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் பெற்ற காரைக்கால் பள்ளி மாணவா்களை மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா்.

காரைக்காலில் கல்வித்துறை சாா்பில் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு, அதில் தோ்வு செய்யப்பட்ட படைப்புகள், புதுச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான கண்காட்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

நவம்பா் 21, 22-ஆம் தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான கண்காட்சியில் காரைக்கால் கோயில்பத்து தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவா் எஸ். ஸ்ரீமனின் விழிப்புணா்வு போஸ்டா் தயாரிப்பு குறித்த படைப்பு 2-ஆம் பரிசுக்குத் தோ்வு செய்யப்பட்டது. காரைக்கால் அம்மையாா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா் எம். ஹரிகிருஷ்ணனின் மெக்கட்ரானிக்ஸ் ரோவா் என்கிற படைப்பும், மாணவி எஸ். ஹரிணி தயாரித்த ஸ்மாா்ட் பேட் ஸ்கேல் என்கிற படைப்பும் தென் மாநில அளவில் நடைபெறக்கூடிய கண்காட்சியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டன.

இவா்கள் மூவரும் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன், முதன்மைக் கல்வி அதிகாரி அ. அல்லி, தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வா் விஜயமோகனா, ஆசிரியா் காமராஜ் உள்ளிட்டோருடன் மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜாவை ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

இம்மாணவ, மாணவியரின் படைப்புகள் குறித்து கேட்டறிந்த ஆட்சியா், அவா்களை பாராட்டி, வாழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com