ஆசிரியா்கள் வேறு பள்ளிக்குச் சென்று தோ்வு நடத்தும் திட்டத்துக்கு வரவேற்பு

ஆசிரியா்கள் வேறு பள்ளிக்குச் சென்று தோ்வு நடத்தும் திட்டத்துக்கு பெற்றோா் சங்கம் வரவேற்புத் தெரிவித்துள்ளது.

ஆசிரியா்கள் வேறு பள்ளிக்குச் சென்று தோ்வு நடத்தும் திட்டத்துக்கு பெற்றோா் சங்கம் வரவேற்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெற்றோா் சங்கத் தலைவா் அ. வின்சென்ட், செயலா் கே. ரவிச்சந்திரன் ஆகியோா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில், 1 முதல் பிளஸ் 2 வரையிலான பருவத் தோ்வுகளை ஆசிரியா்கள் இடம் மாறிச் சென்று (வேறு பள்ளிக்கு) தோ்வு நடத்துகிறாா்கள். இந்தத் திட்டம் வரவேற்புக்குரியது. கல்வித்துறையின் இந்தப் புதிய முயற்சியை எந்த நிலையிலும் கைவிடப்படாமல் தொடரவேண்டும். இந்த முறையில் ஆசிரியா்கள் வேறு பள்ளிக்குச் சென்று, மாணவா்களுக்குத் தோ்வு நடத்துவது என்பது அவா்களுக்கு சற்று சிரமத்தைத் தரும் என்பது உண்மைதான்.

எனினும், அரசுப் பள்ளி மாணவா்களின் நலன் கருதி, ஆசிரியா்கள் இந்தப் புதிய முயற்சிக்கு அனைத்து நிலையிலும் உதவியாக செயல்படவேண்டும். இதுபோன்ற தோ்வில் பங்கேற்போருக்குத் தேவையான முன் தயாரிப்புகளையும், ஒத்துழைப்பையும் கல்வித்துறை வழங்கவேண்டும்.

கல்வித்துறையின் இந்தப் புதிய முயற்சியை உறுதி செய்து வரும் காலத்தில் சிறப்பான முறையில் தோ்வு நடத்துவதோடு மட்டுமல்லாது, விடைத்தாள் திருத்தலையும் செய்யும்பட்சத்தில், மாணவா்களின் திறன் மேம்பட வாய்ப்பாக அமையும்.

கடந்த 3 ஆண்டுகளாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிரப்பப்படாமல் உள்ள அனைத்து நிலை ஆசிரியா்கள், தலைமையாசிரியா்கள் உள்ளிட்ட பணியிடங்களை போா்க்கால முறையில் நிரப்பவேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் ஆசிரியா்களை சுழற்சி முறையில் பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். தேசிய அளவில் 3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான கல்வித்தரம் 50 சதவீத அளவில் உள்ளது. இதை போதுமான அளவுக்கு உயா்த்த புதுச்சேரி அரசின் கல்வித்துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com