உணவு உற்பத்தியை அதிகரிக்கும் கட்டாயத்தில் உள்ளோம்: இயற்கை விஞ்ஞானி பேச்சு

உலக மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றார்

உலக மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றார் குளித்தலை கேவிகே இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத் தலைவரும் முதுநிலை விஞ்ஞானியுமான முனைவர் ஜெ. திரவியம்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் கரூர் அரசு கலைக் கல்லூரியின் வேதியியல் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற கிராமப்புறை விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான இலவச பயிலரங்கு நடைபெற்றது.
இதில் பங்கேற்று வேளாண்மையில் தற்போதைய பசுமை தொழில்நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பில் மேலும் அவர் பேசியது:
நம் நாட்டின் விவசாயத்தில் ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் மண் வளம் கெட்டுப் போவதுடன் விளைச்சலும் குறைந்து, நம் உடலும் பாதிப்புக்குள்ளாகிறது. இதனால் களைச்செடிகளை உரமாக மாற்ற வேண்டும். மண்ணில் ரசாயன உரங்கள் இடுவதைத் தவிர்த்து இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும் மண்ணில் அங்ககக் கரிம சத்துகளை அதிகப்படுத்த வேண்டும். இவற்றைத்தவிர விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்ய வேண்டும். 
விவசாயத்தில் உழவில்லா தொழில்நுட்பட்பத்தை பயன்படுத்தி குறைந்த நீரில் அதிக பரப்பில் விவசாயம் செய்யும் முறையையும் கடைப்பிடிக்க வேண்டும். மழைநீரை சேமிக்க அதிகளவில் பண்ணைக்குட்டை ஏற்படுத்த வேண்டும். நம் நாட்டை விட மூன்றில் ஒரு பங்கு மழை வளம் கிடைக்கும் இஸ்ரேல் நாட்டில் நீரை மறுசுழற்சி செய்து விவசாயத்தை பயன்படுத்துவதன் மூலம் இன்று விவசாய பொருட்கள் ஏற்றுமதியில் முன்னனி நாடாகத் திகழ்கிறது. விவசாயத்தில் நீர் சிக்கனம் தேவை. வரும் 2050-ல் உலக மக்கள்தொகை 9.8 பில்லியனாக போகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 
பெரும்பாலும் வீட்டிலேயே உணவு உற்பத்தியை பெருக்கும் முறையை கடைப்பிடிக்க வேண்டும். உணவு முறையிலும் மாற்றம் வேண்டும் என்றார்.
கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் (பொ) அர. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வேதியியல் துறை தலைவர் இரா. சீனிவாசன் வரவேற்றார். உதவிப்பேராசிரியர் முனைவர் ப. முத்துக்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com