சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

காரைக்காலில் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்


காரைக்காலில் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் நுகர்வோர் நலச் சங்கத்தின் 100- ஆவது மாதாந்திரக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. சங்க கெளரவத் தலைவர் எஸ். கணபதி தலைமை வகித்தார். செயலர் வி. சுப்பிரமணியன், பொருளாளர் எம்.ஆர். சந்தனசாமி, இணைச் செயலாளர் எஸ். கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரைக்கால் மாவட்ட பெட்காட் செயலர் எஸ். சிவக்குமார், வைஜெயந்தி ராஜன், நெடுங்காடு சட்டப் பேரவைத் தொகுதி செயலாளர் ராஜ் ஆகியோர் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினர்.
கூட்டத்தில், சங்க செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் நடத்தப்படவேண்டிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தீர்மானங்கள்: மின்கட்டணம் செலுத்த குறைந்தபட்சம் 20 நாள்கள் கால அவகாசம் அளிக்க மின்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்; குண்டும், குழியுமாக உள்ள திருமலைராயன்பட்டினம் கிழக்கு புறவழிச் சாலையை பொதுப்பணித் துறை சீரமைக்க வேண்டும்; சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், நுகர்வோர் நலச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சங்கத் தலைவர் வி. ராஜேந்திரன் வரவேற்றார். துணைத் தலைவர் ஜி. ஆனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com