காரைக்கால் குட்ஷெப்பர்ட் பள்ளியில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்

காரைக்கால் குட்ஷெப்பர்ட் ஆங்கிலப் பள்ளியில் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது.

காரைக்கால் குட்ஷெப்பர்ட் ஆங்கிலப் பள்ளியில் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது.
முன்னோர்களின் பழக்க, வழக்கங்களை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில், கிராமிய பொங்கல் விழாவாக இந்த விழா கொண்டாடப்பட்டது. இதயாலயா அருட்சகோதரி ப்ளோரன்ஸ், அருட்சகோதரி எர்வின், விவசாய சங்கத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். 
மாணவ, மாணவியர் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.
விழாவில் பங்கேற்றவர்களுக்குப் பாரம்பரிய உணவு வகைகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டன. 
பள்ளித் தாளாளர் ரான்சன் தாமஸ், பள்ளி முதல்வர் ஜாய் தாமஸ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
பிரைட் அகாதெமி பள்ளியில்...
காரைக்கால், பி.ஆர்.என். நகர் வேட்டைக்காரன் தெருவில் உள்ள பிரைட் அகாதெமி பள்ளியில் பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து பாரம்பரிய முறைப்படி, பொங்கலிட்டனர். இதைத் தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
பின்னர், மாணவர்கள் பெரிதும் விரும்பும் பண்டிகை தீபாவளியா? பொங்கலா? என்ற தலைப்பில் மாணவர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com