தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள், ஆசிரியர்களுக்குப் பரிசு

பெங்களூருவில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியில் காரைக்கால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பரிசுகளை வென்றனர்.

பெங்களூருவில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியில் காரைக்கால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பரிசுகளை வென்றனர்.
பெங்களூருவில் அமைந்துள்ள விஸ்வேஸ்வரைய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம், அறிவியல் அருங்காட்சியகங்களுக்கான தேசிய சபையின் ஒரு அங்கமாக திகழ்கிறது. இதன் மேற்பார்வையில் தென் மாநிலங்களான ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் அறிவியலை மாணவர்கள் மற்றும் மக்களிடையே பரப்பும் வகையில், தென்னிந்திய அறிவியல் கண்காட்சி நடத்துகிறது. நிகழாண்டு  பெங்களூரு செயிண்ட் ஜோசப் இந்தியன் உயர்நிலைப்பள்ளியில் ஜன. 7 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இக்கண்காட்சியில், ஆறு மாநிலங்களுக்கான பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தனிப்பட்ட, இரு நபர்களுக்கான குழு மற்றும் ஆசிரியருக்கான பிரிவில் தங்களுடைய படைப்புகளை காட்சிப் பொருள்களாக வைத்து அதற்கான விளக்கங்களை அளித்தனர்.
பரிசளிப்பு விழாவில், காரைக்கால், கோட்டுச்சேரி வ.உ.சிதம்பரனார் அரசு மேனிலைப்பள்ளி கணித ஆசிரியர் சு. சுரேஷ், தன்னுடைய கணிதப் படைப்புக்காக சிறந்த ஆசிரியர் படைப்பிற்கான புதுச்சேரி கோப்பையையும், ரொக்கப் பரிசையும் பெற்றார். காரைக்காலிலிருந்து கலந்து கொண்டவர்களில் குழுப்பிரிவில் புதுத்துறை அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சரவணன், சந்தோஷ்குமார் மற்றும் தனிப்பிரிவில் காரைக்கால்அம்மையார் பள்ளி மாணவர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் இரண்டாம் பரிசை பெற்றனர். யுவராஜ் பள்ளி மாணவர் முத்துக்குமார்,  பூவம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் விக்னேஷ், பாலச்சந்தர், குட்ஷெப்பெர்டு பள்ளி மாணவர் நிதீஷ் ஆகியோர் புத்தகப் பரிசைப் பெற்றனர். பரிசு பெற்றுத் திரும்பிய ஆசிரியர்கள், மாணவர்களை அந்தந்த பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com