சேத்தூர் பிரதாப சிம்மேசுவர சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சேத்தூர் பிரதாப சிம்மேசுவர சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி வியாழக்கிழமை இரவு

சேத்தூர் பிரதாப சிம்மேசுவர சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி வியாழக்கிழமை இரவு திருக்கல்யாண வைவபம், பஞ்சமூர்த்திகள் வீதியுலா ஆகியன நடைபெற்றன.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், சேத்தூர் என்றழைக்கப்படும் அகரசேத்தூர் கிராமத்தில் சிவகாம சுந்தரி சமேத பிரதாப சிம்மேசுவர சுவாமி கோயில் உள்ளது. நூற்றாண்டுகள் பழைமையான கோயில் சிதிலமடைந்ததையொட்டி, கோயில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  குடமுழுக்கைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 7 மணியளவில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
 சன்னிதியில் சிவகாம சுந்தரி - பிரதாப சிம்மேசுவர சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டனர். வரிசை எடுத்துவருதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட திருமாங்கல்யதாரணத்துக்கு முந்தைய சடங்குகளை சிவாச்சாரியார்கள் மேற்கொண்டு,  சிறப்பு மேள வாத்தியங்கள் முழங்க, சுவாமி சார்பில் சிவகாம சுந்தரிக்கு திருமாங்கல்யதாரணம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. திருக்கல்யாண வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்னர் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் அதனதன் வாகனங்களில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com