மகளிர் கல்லூரிக்கு நாப்கின் சாதனங்கள் அளிப்பு

காரைக்கால் மகளிர் கல்லூரியில் நாப்கின் இன்சினேட்டர் சாதனம், நாப்கின் வெண்டிங் சாதனம் ஆகியவை வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டன.

காரைக்கால் மகளிர் கல்லூரியில் நாப்கின் இன்சினேட்டர் சாதனம், நாப்கின் வெண்டிங் சாதனம் ஆகியவை வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டன.
காரைக்கால் அரசு அவ்வையார் மகளிர் கல்லூரியின் கூடுதல் வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தில் பயிலும்  மாணவிகளின் அத்தியாவசிய  பயன்பாட்டுக்காக ரூ.70 ஆயிரம்  மதிப்பீட்டில் நாப்கின் இன்சினேட்டர் சாதனத்தை காரைக்கால் ரோட்டரி கிளப் சார்பிலும், ரூ. 8 ஆயிரம் மதிப்பீட்டில் நாப்கின் வென்டிங் மிஷினை கல்லூரி பெற்றோர்- ஆசிரியர்கள் கழகத்தின் சார்பிலும் வாங்கப்பட்டு கல்லூரி மாணவிகள் பயன்பாட்டுக்காக நிர்வாகத்திடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பாலாஜி, பெற்றோர்- ஆசிரியர்கள் கழகத்தின் தலைவர் ஏ.எஸ்.டி.அன்சாரி பாபு, காரைக்கால் ரோட்டரி கிளப் தலைவர் வி.ஆனந்தன், செயலாளர் சௌரிராஜன், துணை ஆளுநர் செந்தில் வேலன், முன்னாள் தலைவர் சஞ்சய் குமார், கல்லூரி பேராசிரியர்கள் கனகவேல், சிவசங்கர், பேராசிரியை காமாட்சி மற்றும் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர். 
அவ்வையார் மகளிர் கல்லூரி பிரதானக் கட்டடத்தில் இந்த சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும், கூடுதல் வகுப்பறைகளுடன் கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் மாணவிகளுக்காக இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ரோட்டரி அமைப்பினர், பெற்றோர்- ஆசிரியர் கழகத்தினருக்கு 
கல்லூரி நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com