செங்குந்த மகாஜன கல்விச் சங்க பொதுக்குழு கூட்டம்

காரைக்கால் செங்குந்த மகாஜன கல்விச் சங்க பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் செங்குந்த மகாஜன கல்விச் சங்க பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட செங்குந்த மகாஜன கல்விச் சங்கத்தின் பொதுக்குழு  கூட்டம் காரைக்கால் செங்குந்த சிவ பஜனை மடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜி. முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்.
வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும், ஆண்டுதோறும் 80 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை தவிர, உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டன. 2020-2023-ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தலை வரும் செப்டம்பரில் பொதுக்குழுவை கூட்டி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 
கூட்டத்தில் சென்ற ஆண்டு ஊக்கப் பரிசளிப்பு விழா வரவு செலவு விவரங்களை பொருளாளர் கு. சாந்தகுமார் விளக்கிப் பேசினார்.  சங்கத்தின் பொதுச்செயலாளர் வி. ராஜேந்திரன், முன்னாள் செயலாளர் டி. செல்வராஜ், பி. ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக சங்கத்தின் தலைவர் பொன். தட்சணாமூர்த்தி வரவேற்று பேசினார். நிறைவாக மக்கள் தொடர்பாளர் டி . ரஞ்சன் நன்றி கூறினார். இளைஞர் சங்க பொறுப்பாளர்கள் எஸ். ஜெகநாதன், எஸ்.டி.சம்பந்தன், என்.விநாயகமூர்த்தி  ஆகியோர் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com