கோயிலுக்குச் செல்ல ஆற்றுப்பாலம்: முதல்வரிடம் வலியுறுத்தல்

காரைக்கால் சித்திரக்காளியம்மன் கோயிலுக்குச் செல்ல ஆற்றில் பாலம் கட்டித் தருமாறு புதுச்சேரி முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் சித்திரக்காளியம்மன் கோயிலுக்குச் செல்ல ஆற்றில் பாலம் கட்டித் தருமாறு புதுச்சேரி முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் ராஜ.லட்சுமணன், செயல் தலைவர் நாக.தணிகாசலம் ஆகியோர் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, நலத்துறை அமைச்சர் எம்.கந்தசாமி ஆகியோரை தனித்தனியே திங்கள்கிழமை  சந்தித்து அளித்த கோரிக்கை மனு:
காரைக்கால் பச்சூர் நூலாற்றங்கரையில் சித்திரக்காளியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. நூலாற்றங்கரை குடியிருப்புவாசிகள், பரங்கி மலைத்தெரு, பி.எஸ்.ஆர். நகர், காளியம்மன் கோயில் தெரு, பச்சூர் பிரதான சாலை, தருமபுரம் வடக்குப் பேட், புத்தமங்கலம், உத்திரங்குடி, சௌதா நகர், லட்சுமி கல்யாண் நகர், திருவள்ளுவர் நகர், நாஞ்சிராங்கோடை, பீமராவ் நகர் உள்ளிட்ட கிராம மக்களின் வழிபாட்டுத் தலமாக இது உள்ளது. ஆண்டுதோறும் வைகாசி விசாகம், காணும் பொங்கல் நாள், கார்த்திகை தீபத் திருவிழா, நவராத்திரி, பௌர்ணமி நாள்களில் சிறப்பு வழிபாடுகள் கோயிலில் நடைபெறுகின்றன.  ஆற்றின் அடுத்த கரையோரத்தில் உள்ள இக்கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல முறையான நேர் வழியில்லாததாதல் சிரமமாக உள்ளது. எனவே கோயில் அருகே நூலாற்றில் 50 அடி அகலத்துக்கு குறையாமல், ஆதிதிராவிடர் சிறப்புக்கூறு நிதியிலிருந்து பாலம் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com