திறனற்ற காரைக்கால் சிறப்புக் காவல் பிரிவு: புதுச்சேரி காவல்துறை தலைவரிடம் பாமக புகார்

காரைக்கால் மாவட்ட காவல்துறையில் திறனற்ற நிலையில் சிறப்புக் காவல் பிரிவு இருப்பதாகவும், திறமையான

காரைக்கால் மாவட்ட காவல்துறையில் திறனற்ற நிலையில் சிறப்புக் காவல் பிரிவு இருப்பதாகவும், திறமையான அதிகாரிகளை நியமித்து வலிமை பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்துறை தலைவரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட பாமக செயலர் க.தேவமணி புதுச்சேரி காவல்துறைத் தலைவருக்கு (டிஜிபி) செவ்வாய்க்கிழமை  அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பது:
காரைக்கால் பிராந்தியத்தில் கள்ளச் சாராயம், கஞ்சா போன்ற போதைப் பொருள், கள்ள லாட்டரி, விபசாரம் போன்ற சட்ட விரோத, சமூகக் கேடான செயல்கள் அதிகரித்துள்ளன. காரைக்காலில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தியதாக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா பொட்டலங்கள் கடற்கரையருகே கிடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சாலையில்  பேரணியாக  சென்ற ஓர் அரசியல் கட்சியினர் திடீரென புகுந்து இருக்கைகளை வீசியெறிந்த சம்பவம் பதற்றத்தை ஏற்பட்டது.
கும்பகோணம் பகுதி திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்புடையவர் காரைக்காலில் தங்கியிருந்து தமிழக காவல்துறையினர் வந்து அதற்கு தொடர்புடையவரை கைது செய்ததும், தேசிய புலனாய்வு அதிகாரிகள் காரைக்காலில் சோதனை மேற்கொண்ட செயலும் அண்மையில் நடந்தன.
இதுபோன்ற செயல்களை முன்கூட்டியே ரகசியமாக அறிந்து காவல்துறைக்கும், அரசுக்கும் தெரிவித்து காரைக்காலை அமைதியான பிராந்தியமாக கொண்டு செல்லும் நிலை காரைக்கால் துறையில் உள்ள சிறப்புக் காவல் பிரிவுக்கு உண்டு. ஆனால் இந்த அமைப்பு காரைக்கால் காவல்துறையில் வலுவிழந்து காணப்படுகிறது.
இந்த பிரிவுக்கு நிரந்தரமாக காவல் ஆய்வாளர் நியமிக்கப்படவில்லை. கடலோரக் காவல்படையின் காவல் ஆய்வாளரே கூடுதல் பொறுப்பாக சிறப்புப் பிரிவையும் கவனித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான பிரிவுக்கு, கடலோரக் காவல்படை ஆய்வாளரை கூடுதல் பொறுப்பாக கவனிக்கச் செய்திருப்பதன் மூலம் காரைக்கால் சிறப்புப் பிரிவு பல நிலைகளில் பின்னடைவில் உள்ளது. எனவே நீண்ட காலமாக சிறப்பிப் பிரிவு ஆய்வாளர் பணியை செய்துவருபவரை அதிலிருந்து விடுவித்து, சிறப்புப் பிரிவுக்கு புதிதாக ஓர் ஆய்வாளரை நியமிப்பதோடு, திறமைமிக்க பிற அலுவலர்களை அங்கு நியமிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com