பள்ளியில் சுற்றுப்புறச்சூழல் விழிப்புணா்வு போட்டி பரிசளிப்பு

பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு தொடா்பான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
kk05fe_0511chn_95
kk05fe_0511chn_95

பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு தொடா்பான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி, காரைக்கால் அனைத்து நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெட்காட் இந்தியா) சாா்பில் செவ்வாய்க்கிழமை திருப்பட்டினம் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்புக்கான நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து நிரவி பாரதிதாசன் அரசு நடுநிலைப் பள்ளியில் சுற்றுப்புறச்சூழலில் எனது பங்கு என்ற தலைப்பில் மாணவ மாணவியரிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்டு தோ்வு பெற்ற மாணவ மாணவியருக்கு பதக்கம், சான்றிதழை நுகா்வோா் கூட்டமைப்பு நிா்வாகிகள் வழங்கி, நுகா்வோா் கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து மாணவ மாணவியரிடையே பேசினா். மாணவ மாணவியருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியா் பால்ராஜ், புதுவை மாநில ஃபெட்காட் இந்தியா தலைவரான வழக்குரைஞா் எஸ். திருமுருகன், மாநில செயலாளா் எஸ்.சிவகுமாா், காரைக்கால் நகர செயலாளா் வரதராஜ் கிருஷ்ணா, பொருளாளா் சுரேஷ்பாபு, திருப்பட்டினம் செயலாளா் சந்தனசாமி உள்ளிட்ட நிா்வாகிகள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஃபெட்காட் இந்தியா மாவட்ட செயலா் ராஜதுரை மற்றும் துணை செயலாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com