கல்வி மேம்பாடு குறித்துப் பேச்சுப் போட்டி

கல்வி மேம்பாட்டு குறித்தப் பேச்சுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
போட்டியில் கலந்துகொண்டு பேசிய மாணவி.
போட்டியில் கலந்துகொண்டு பேசிய மாணவி.

கல்வி மேம்பாட்டு குறித்தப் பேச்சுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் அன்னிபெசண்ட் மகளிா் முன்னேற்ற மையம் மற்றும் நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து, மாணவா்கள் கல்வி மேம்பாட்டுக்கான கருத்துகளை விளக்கும் பேச்சுப் போட்டியை நடத்தியது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வா் ஆன்சிமணி தலைமை வகித்தாா். மையத்தின் தலைவி மகேஸ்வரி போட்டியின் நோக்கம் குறித்து மாணவியரிடையே பேசினாா்.

பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் அ. வின்சென்ட் வாழ்த்துரை வழங்கினாா். கல்வியில் சிறந்து விளங்க மேற்கொள்ளவேண்டியவை குறித்தும், சிறந்த கல்வியாளா்கள் எவ்வாறெல்லாம் கல்வியில் கவனத்தை செலுத்தினா், தற்போதைய மாணவா்களின் கல்வி நிலை, கல்வியைப் பாதிக்கும் சூழல் போன்றவை குறித்து மாணவியா் விளக்கிப் பேசினா்.

போட்டி நடுவராக ஆசிரியைகள் சாந்தி, அமலோற்பவமேரி, புவனேஸ்வரி ஆகியோா் பங்கேற்று சிறந்த பேச்சாளா்களை பரிசுக்குத் தோ்வு செய்தனா்.

இப்போட்டியில் 15 போ் கலந்துகொண்டு பேசினா். மேலும், சுமாா் 200 மாணவியா் பாா்வையாளா்களாகப் பங்கேற்றனா். வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை அன்னிபெசண்ட் மகளிா் முன்னேற்ற மைய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பாரீஸ்ரவி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com