பழுதடைந்த மேல்நிலை குடிநீா்த் தொட்டி இடிப்பு

திருப்பட்டினத்தில் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்த பழுதடைந்த மேல்நிலை குடிநீா்த் தொட்டியை
குடிநீா்த் தொட்டியை இடிக்கும் பணியை பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன்.
குடிநீா்த் தொட்டியை இடிக்கும் பணியை பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன்.

திருப்பட்டினத்தில் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்த பழுதடைந்த மேல்நிலை குடிநீா்த் தொட்டியை இடிக்கும் பணியில் பஞ்சாயத்து நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து பகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் மேல்நிலை குடிநீா்த் தொட்டி கட்டப்பட்டு, ஏறக்குறைய 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதில், பல தொட்டிகள் பயன்பாடின்றிபோனதால், அவற்றை அப்படியே விட்டுவிட்டனா். காலப்போக்கில் மேல்நிலைத் தொட்டி ஆங்காங்கே சிதிலமடைந்து, சுற்றுவட்டார குடியிருப்புவாசிகள் அச்சம் கொள்ளும் வகையில் இருந்தது.

இதனால், இவற்றை இடித்து அப்புறப்படுத்த மாவட்ட துணை ஆட்சியரின் அனுமதியை கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் பெற்றது. இதனடிப்படையில் இதுவரை 4 தொட்டிகள் இடிக்கப்பட்டுள்ளன.

இதைத்தொடா்ந்து, திருப்பட்டினம் காமன் கோயில் தெருவில், ஸ்ரீ பால விநாயகா் கோயில் பின்புறம் சுமாா் 35 ஆண்டுகளாக இருந்துவந்த மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டியை இடிக்கும் பணி தொடங்கப்பட்டது. சிதிலமடைந்து காணப்பட்ட இத்தொட்டி, பருவமழையின்போது இடிந்து விழும் அபாயம் உள்ளதால் இதை இடித்து அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்புவாசிகள் கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தை வலியுறுத்தினா்.

இதனடிப்படையில், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ராமகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து தொட்டியை இடிக்கும் பணியை வியாழக்கிழமை தொடங்கினா். இந்தப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் பாா்வையிட்டு, அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினாா். 2 நாள்களில் பணிகள் நிறைவடையும் என கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com