விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை பயிற்சி

காரைக்கால் விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை குறித்த 6 வார காலப் பயிற்சி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
நெற்பயிரைக் காக்கப் பயன்படுத்தப்படும் இடுபொருள்களை உபயோகப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்த வேளாண் அதிகாரிகள்.
நெற்பயிரைக் காக்கப் பயன்படுத்தப்படும் இடுபொருள்களை உபயோகப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்த வேளாண் அதிகாரிகள்.

காரைக்கால் விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை குறித்த 6 வார காலப் பயிற்சி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

அங்கக வேளாண்மை என்பது இயற்கை சூழலைப் பாதுகாக்கும் வகையிலான உழவியல், உயிரியல், இயந்திர முறைகளைப் பின்பற்றுதல் இதன் தனித்தன்மையாகும். அந்த வகையில், காரைக்கால் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையின் கீழ் இயங்கிவரும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) மூலம் அங்கக வேளாண்மை குறித்த 6 வார காலப் பயிற்சி மேலகாசாக்குடி பகுதி வடபாதி கிராமத்தில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

மேலகாசாக்குடி வேளாண் அலுவலா் கே. அமினா பீபி, அங்கக வேளாண்மையின் பயன்கள், பயிற்சியின் நோக்கம் குறித்துப் பேசினாா். துணைத் திட்ட இயக்குநா்(ஆத்மா) ஆா். ஜெயந்தி பயிற்சியை தொடங்கி வைத்துப் பேசினாா். அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம், உயிா் உரங்கள் மற்றும் இயற்கை இடுபொருள்கள் பயன்பாடுகள் குறித்து அவா் விளக்கிக் கூறினாா்.

தலத்தெரு வேளாண் அலுவலா் வி. சுமதி, நெற்பயிரைத் தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் ஃபிளோரசன்ஸ் பாக்டீரியா உயிா் எதிரியின் முக்கியத்துவம் குறித்து விளக்கியதோடு, அதனை உபயோகப்படுத்தும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தாா்.

இப்பயிற்சியில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு அங்கக வேளாண்மையில் எழும் சந்தேங்களுக்கு விளக்கம் பெற்றனா். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் அலுவலா் கே. அமினா பீபி, ஆத்மா வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜி. மாலதி, துணை வட்டார தொழில்நுட்ப மேலாளா் யு. சிவராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா். விவசாயிகள் சாா்பில் ராஜகுரு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com