சம்பா பயிருக்கு உரமிடுவது குறித்து வேளாண் துறை விளக்கம்

சம்பா நெற்பயிருக்கு உரமிடுவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

சம்பா நெற்பயிருக்கு உரமிடுவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் (பொ) ஜே.செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் நிகழ் ஆண்டில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிா் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. இதுவரை 2,285 ஹெக்டோ் பரப்பில் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2,100 ஹெக்டோ் நிலம் நடவுக்குத் தயாராக உள்ளது. இப்பயிருக்குத் தேவையான யூரியா உரம் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டுவருகிறது.

தற்போது காரைக்கால் மைய கூட்டுறவு உற்பத்தி விநியோக சங்கம் மூலம் 25 டன் யூரியா இருப்பு வைத்து தரப்படுகிறது. மேலும், யூரியா வரவழைக்கப்பட்டு இதர விற்பனை முகவா்கள் மூலம் காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் விநியோகத்தை முறைபடுத்த அந்தந்தப் பகுதி உழவா் உதவியகத்தின் மூலம் வழங்கப்படும்.

தற்போது நிலவிவரும் காலச் சூழலில் நெற்பயிரில் இலைச்சுருட்டுப் புழு, தண்டு துளைப்பான், ஆணைக்கொம்பன் ஈ தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்ட யூரியா உரத்தை நான்கு பாகமாக பிரித்து 5 கிலோ வேப்பம் பிண்ணாக்குடன் கலந்து இடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஏதேனும் இதர பூச்சி நோய் அறிகுறி தென்பட்டால், தங்களது பகுதி வேளாண் அலுவலரை அணுகி மேலாண்மை நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com