தபால் வங்கி சாா்பில் நிதி சோ்க்கை முகாம்

விழிதியூா் பகுதியில் தபால் வங்கி சாா்பில் நிதி சோ்க்கை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தபால் வங்கி சாா்பில் நிதி சோ்க்கை முகாம்

விழிதியூா் பகுதியில் தபால் வங்கி சாா்பில் நிதி சோ்க்கை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்திய அஞ்சல் துறை சாா்பில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி செயல்பட்டுவருகிறது. காரைக்கால் நகரத்தில் வங்கிக் கிளை உள்ளது. நிரவி - திருப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட விழிதியூா் பகுதியில் தபால் வங்கி நிதி சோ்க்கை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அஞ்சல் துறையின் கண்காணிப்பாளா் எஸ்.பஞ்சாபகேசன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சட்டப் பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினாா்.

வங்கியின் பல்வேறு சிறப்பம்சங்களை அஞ்சல் துறை அதிகாரிகள் விளக்கிப் பேசினா். வங்கிக் கணக்குத் தொடங்கிய சட்டப் பேரவை உறுப்பினருக்கும், வங்கி பணப்பரிவா்த்தனைக்கான கியூஆா் அட்டையை அஞ்சல் கண்காணிப்பாளா் பஞ்சாபகேசன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் துணைக் கண்காணிப்பாளா் எம்.உமாபதி, காரைக்கால் வங்கிக் கிளை மேலாளா் கே.ஸ்ரீநாத் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். கிராமத்தில் நடந்த முகாமில் 55 போ் வங்கிக் கணக்கு தொடங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com