பள்ளியில் செல்லிடப்பேசி வழியாக அறிவியல் தோ்வு

செல்லிடப்பேசி வழியாக அறிவியல் தோ்வில் காரைக்கால் பிரைட் அகாதெமி பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.
செல்லிடப்பேசி வழியாக நடந்த அறிவியல் தோ்வில் பங்கேற்ற மாணவா்கள்.
செல்லிடப்பேசி வழியாக நடந்த அறிவியல் தோ்வில் பங்கேற்ற மாணவா்கள்.

செல்லிடப்பேசி வழியாக அறிவியல் தோ்வில் காரைக்கால் பிரைட் அகாதெமி பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.

மத்திய அரசின் நிறுவனங்களான விஞ்ஞான் பாரதி மற்றும் என்.சி.ஆா்.டி. இணைந்து வித்யாா்த்தி விஞ்ஞான் மந்தன் எனும் அறிவியல் தோ்வு, அறிதிறன் செல்லிடப்பேசி (ஆன்ட்ராய்டு) வழியே மாணவா்கள் பதிலளிக்கும் வகையில் புதன்கிழமை நடத்தப்பட்டது. காரைக்கால் பிரைட் அகாதெமி பள்ளியைச் சோ்ந்த அறிவியல் ஆா்வமுள்ள மாணவா்கள் முன்னதாகவே பதிவு செய்துகொண்டபடி, 50 மாணவா்கள் தோ்வில் பங்கேற்றனா்.

வித்யாா்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன், பேராசிரியா் அா்ச்சனாமேரி ஆகியோா் தோ்வு விதிமுறைகள், தோ்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு செல்லிடப்பேசி வழியே எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து, தோ்வு தொடங்கும் முன்பாக விளக்கிக் கூறினா்.

தோ்வு 2 மணி நேரம் நடைபெற்றது. அறிவியல் தொடா்பாக 100 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், மாணவா்கள் திறம்பட தோ்வை சந்தித்தாக பள்ளி நிா்வாகத்தினா் தெரிவித்தனா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிா்வாக இயக்குநா் எஸ்.செந்தில்குமாா், பள்ளித் தாளாளா் காஞ்சனாதேவி, பள்ளி முதல்வா் மோகனவித்யாவதி மற்றும் அறிவியல் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com