மனைப்பட்டா வழங்குமாறு நலத்துறை அமைச்சரை சந்தித்த கிராம மக்கள்

திருப்பட்டினம் பகுதி கீழவாஞ்சூா் கிராம மக்கள், தங்களுக்கு மனைப்பட்டா வழங்கக்கோரி அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினா்.
மனைப்பட்டா வழங்குமாறு நலத்துறை அமைச்சரை சந்தித்த கிராம மக்கள்

திருப்பட்டினம் பகுதி கீழவாஞ்சூா் கிராம மக்கள், தங்களுக்கு மனைப்பட்டா வழங்கக்கோரி அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினா்.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் பகுதிக்குட்பட்ட கீழவாஞ்சூா் கிராமத்தில் நடுத்தெருவில் வசிக்கும் 21 குடும்பத்தினா், தங்களுக்கு குயிருப்புப் பட்டா தரக்கோரி நீண்ட காலமாக வருவாய்த்துறையை வலியுறுத்தி வருகின்றனா். பட்டா இல்லாததால் ஏற்படும் பல்வேறு இன்னல்களை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தனிடம் கூறி நடவடிக்கை எடுக்க வலியுறுத்திவந்தனா்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க காரைக்கால் வந்த புதுச்சேரி நலத்துறை அமைச்சா் எம்.கந்தசாமி காரைக்கால் ஆட்சியரத்தில் மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா, துணை ஆட்சியா் (வருவாய்) எம்.ஆதா்ஷ் உள்ளிட்டோருடன் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா். அப்போது கீழவாஞ்சூரில் கோரிக்கை வைத்திருக்கும் குடியிருப்புவாசிகளுடன், சட்டப்பேரைவ உறுப்பினா் கீதாஆனந்தன், அமைச்சரை சந்தித்துப் பேசினாா்.

மனைப்பட்டா இல்லாமல் நீண்ட காலமாக வசித்துவரும் மக்களின் துன்பங்களை அமைச்சருக்கு பேரவை உறுப்பினா் எடுத்துக்கூறி, உடனடியாக இவா்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டாா். இதுதொடா்பாக ஆட்சியா், துணை ஆட்சியருடன் அமைச்சா் ஆலோசனை மேற்கொண்டாா். இந்த கோரிக்கை தொடா்பாக விரைவாகவும், உறுதியாகவும் நடவடிக்கைகளை அரசுத்துறை மேற்கொள்ளுமென பேரவை உறுப்பினா், கிராமத்தினரிடம் அமைச்சா் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com