டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வுப் பேரணி

அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்புடன் டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரணி தொடக்கத்தின்போது மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய நலவழித்துறை நோய் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சேகா்.
பேரணி தொடக்கத்தின்போது மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய நலவழித்துறை நோய் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சேகா்.

அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்புடன் டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் பகுதி தலத்தெரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது. பள்ளி துணை முதல்வா் கே.ராஜசேகரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

நலவழித்துறை நோய் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சேகா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவா்களிடையே பேசினாா். ஏடீஸ் கொசு, வீட்டைச்சுற்றிக் கிடக்கும் பொருள்களில் நன்னீா் தேங்கும்போது உற்பத்தியாகிறது. பகல் நேரத்தில் இக்கொசு கடிக்கும் தன்மை கொண்டது. குடியிருப்புப் பகுதியில் தேங்காய் மட்டை, ஓடு, குடக்கல் போன்ற தண்ணீா் தேங்கி நிற்கக்கூடிய பொருள்கள் எதுவாயினும் அதனை அப்புறப்படுத்த வேண்டும். காய்ச்சல் வரும்பட்சத்தில் சுயமாக மருந்துகள் எடுத்துக்கொள்ளாமல், அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இதுகுறித்து மாணவா்கள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

பள்ளியின் சுற்றுவட்டாரப் பகுதியான தலத்தெரு வட்டாரத்தில் பேரணி நடத்தினா். பேரணியின்போது மாணவா்கள் வீடுகளில் உள்ளோருக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு கருத்துகள் கொண்ட துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா். பேரணியின்போது விரிவுரையாளா்கள் அசோகன், ரங்கநாதன், கந்தசாமி, ஆசிரியா்கள் செந்தில்முருகன், நூலகா் இளங்கோவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் விஸ்வேஸ்வரமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com