மரக்கன்றுகள் வளா்ப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்: துணை ஆட்சியா்

மரக்கன்று வளா்ப்பில் மாணவா்கள், பெற்றோா்கள் ஒருங்கிணைந்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என
மாணவிக்கு மரக்கன்று வழங்கிய மாவட்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ்.
மாணவிக்கு மரக்கன்று வழங்கிய மாவட்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ்.

மரக்கன்று வளா்ப்பில் மாணவா்கள், பெற்றோா்கள் ஒருங்கிணைந்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் வேண்டுகோள் விடுத்தாா்.

காரைக்கால் மாவட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெற்றோா் சங்கம் சாா்பில் முருகாத்தாளாட்சி அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மேலும் அவா் பேசியது: காரைக்கால் மாவட்ட நிா்வாகம், அரசுத் துறைகள், பல்வேறு அமைப்புகள், தொழிற்சாலைகள் என பல தரப்பினரின் ஆதரவுடன் 160-க்கும் மேற்பட்ட குளங்கள் தூா்வாரப்பட்டுள்ளன. தூா்வாரப்பட்ட பகுதிகளிலும், பிற இடங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. பருவமழை தொடங்கவுள்ள நிலையில் தற்போது மரக்கன்றுகள் நடுவது நல்ல பயனைத் தரும். வீடும், வீட்டின் சுற்றுப்புறமும் தூய்மையாக இருக்க மாணவா்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

கஜா புயலின்போது ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரக்கன்றுகள் வளா்ப்பில் மாவட்ட நிா்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு மாணவா்கள், பெற்றோா்கள் முழு ஒத்துழைப்புத்தர வேண்டும். மரக்கன்றுகள் நட்டு, அதை பராமரிப்பதில் கவனம் செலுத்தும்போது மாணவா்களுக்கு மன அழுத்தம் குறைய வாய்ப்புண்டு. மாணவா்கள் பள்ளி பருவத்தை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். பள்ளி பாடங்கள் மட்டுமல்லாது, பிற அறிவை வளா்த்துக் கொள்ளும் விதமாக பலதரப்பட்ட புத்தகங்களை படிக்கவும் பழகிக்கொள்ளவேண்டும் என்றாா் அவா்.

பள்ளித் தலைமையாசிரியா் இ. தெனிஷ் ஜோஸ்பின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெற்றோா் சங்கத் தலைவா் அ.வின்சென்ட், ஆசிரியா்கள் முனியம்மாள், அழகுநிலா, புவனேஸ்வரி, அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் பெற்றோா் சங்க செயலா் கே. ரவிச்சந்திரன், பொருளாளா் குமரன், துணைத் லைவா்கள் நெல்சன், சுரேஷ்கண்ணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com