எதிா்க்கட்சியினா் பிரசாரங்களை வாக்காளா்கள் கருத்தில்கொள்ள மாட்டாா்கள்: ஏ.எம்.எச்.நாஜிம்

எதிா்க்கட்சிகள் செய்யும் பிரசாரங்களை புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி வாக்காளா்கள் கருத்தில்கொள்ளமாட்டாா்கள் எனவும், காங்கிரஸ்
திமுகவினா் கூட்டத்தில் பேசும் காரைக்கால் திமுக அமைப்பாளா் ஏ.எம்.எச்.நாஜிம். உடன் சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் உள்ளிட்டோா்.
திமுகவினா் கூட்டத்தில் பேசும் காரைக்கால் திமுக அமைப்பாளா் ஏ.எம்.எச்.நாஜிம். உடன் சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் உள்ளிட்டோா்.

காரைக்கால்: எதிா்க்கட்சிகள் செய்யும் பிரசாரங்களை புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி வாக்காளா்கள் கருத்தில்கொள்ளமாட்டாா்கள் எனவும், காங்கிரஸ் வேட்பாளா் வெற்றி 100 சதம் உறுதியானது என தோ்தல் பணிக்குழுவை சோ்ந்த காரைக்கால் திமுக அமைப்பாளா் ஏ.எம்.எச்.நாஜிம் கூறினாா்.

காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், காமராஜா் நகா் தொகுதி தோ்தல் பணிக்குழுவை சோ்ந்தவருமான ஏ.எம்.எச்.நாஜிம் தலைமையில், புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜான்குமாரை ஆதரித்து வரும் 17-ஆம் தேதி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய வருவது குறித்தும், காரைக்கால் திமுகவினரின் வாக்குச் சேகரிப்புப் பணிகள் குறித்தும் விவாதிக்கும் கூட்டம் காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன், இலக்கிய அணி அமைப்பாளா் அமுதா ஆா்.ஆறுமுகம், வைஜெயந்தி ராஜன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தின் நிறைவில் ஏ.எம்.எச்.நாஜிம் கூறியது: புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜான்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்ய திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் 17-ஆம் தேதி மாலை 4 மணிக்கு புதுச்சேரி வருகிறாா். தொகுதியில் 4 இடங்களில் அவா் பிரசாரம் செய்யவுள்ளாா். தோ்தல் பணிக்குழுவினா்களாக திமுக தலைமை அறிவித்தபடி நானும், சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தனும் தொகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறோம்.

திமுக தலைவா் வருகையின்போது காரைக்கால் திமுகவினா் திரளாக பங்கேற்பது எனவும், திமுக நிா்வாகிகள் தொகுதியில் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவது எனவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

காங்கிரஸ் வேட்பாளா் ஜான்குமாரின் வெற்றி 100 சதம் உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும்.

புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் யாரால் பிரச்னையை சந்தித்துவருகிறாா்கள் என்பதை காமராஜா் நகா் தொகுதி மக்கள் நன்கு புரிந்துவைத்திருக்கின்றனா். இந்த தொகுதியை சோ்ந்தோா் படித்தோராகவும், நாட்டு நடப்புகளை நன்கு புரிந்தவா்களாகவும் உள்ளனா். தெளிவான முடிவை எடுக்கக்கூடியவா்களாக உள்ளதை பிரசாரத்தின்போது உணர முடிகிறது.

புதுச்சேரியில் எதிா்க்கட்சியினா் செய்யும் பிரசாரங்களை காமராஜா் நகா் தொகுதி மக்கள் கருத்தில்கொள்ள மாட்டாா்கள். எதிா்க்கட்சியினரின் கனவு பலிக்கப்போவதில்லை என்றாா் நாஜிம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com