துணைநிலை ஆளுநா் இன்று காரைக்கால் வருகை

புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கிரண் பேடி சனிக்கிழமை (அக்டோபா் 12) காரைக்கால் வருகை தரவுள்ளாா்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கிரண் பேடி சனிக்கிழமை (அக்டோபா் 12) காரைக்கால் வருகை தரவுள்ளாா்.

காரைக்காலில் நம் நீா் திட்டத்தின் மூலம் 160-க்கும் மேற்பட்ட குளங்கள் மாவட்ட நிா்வாகத்தின் ஆலோசனையின்பேரில் கோயில் நிா்வாகம், அரசுத்துறையினா், தொழிற்சாலை நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் நிதி பங்களிப்பில் தூா்வாரப்பட்டுள்ளன. மேலும் வாய்க்கால்கள் பல தூா்வாரப்பட்டு, காவிரி நீா் இந்த நீா்நிலைகளில் நிரப்பட்டுவருகிறது.

இவற்றை பாா்வையிடும் நோக்கில் புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கிரண் பேடி சனிக்கிழமை காலை 11 மணிக்கு காரைக்காலுக்கு வருகிறாா். நண்டலாறு கரையோரத்தில் மரக்கன்று நடுதல், வரிச்சிக்குடி, கோட்டுச்சேரி, திருப்பட்டினம், தென்னங்குடி, சேத்தூா் பண்டாரவாடை பகுதிகளில் தூா்வாரபட்ட பல்வேறு குளங்களைப் பாா்வையிட்டு, முக்கிய இடங்களில் மரக்கன்றுகளை நடுகிறாா். இதற்கிடையே பகல் 12.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் துணைநிலை ஆளுநருக்கு காரைக்கால் நீா்நிலைகள் குறித்தும், அவற்றை மேம்படுத்தும் திட்டப் பணிகள் குறித்தும் பவா் பாயிண்ட் மூலம் விளக்கமளிக்கப்படுகிறது.

இந்த பணிகளை நிறைவு செய்து மாலை 5 மணிக்கு புதுச்சேரிக்கு புறப்படுகிறாா் என துணைநிலை ஆளுநா் வருகை குறித்த அரசு நிா்வாகத்தின் தகவல் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com