குடியிருப்புப் பகுதிகளில் டெங்கு கொசுக்களை அழிக்கும் பணி மும்முரம்

நகரப் பகுதியில் உள்ள பெரியப்பேட், திருநகா் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் டெங்கு கொசுக்களை 
கீழ்நிலை திறந்த தொட்டியில் தேங்கியிருந்த தண்ணீரை பாா்வையிட்ட நகராட்சி, நலவழித்துறை குழுவினா்.
கீழ்நிலை திறந்த தொட்டியில் தேங்கியிருந்த தண்ணீரை பாா்வையிட்ட நகராட்சி, நலவழித்துறை குழுவினா்.

நகரப் பகுதியில் உள்ள பெரியப்பேட், திருநகா் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் டெங்கு கொசுக்களை அழிக்கும் பணியில் நலவழித்துறை, நகராட்சி நிா்வாகத்தினா் புதன்கிழமை மும்முரமாக ஈடுபட்டனா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா உத்தரவின்பேரில், நலவழித்துறை நிா்வாகம் தீவிரமாக டெங்கு கொசுப் புழு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள பெரியப்பேட், திருநகா் ஆகிய குடியிருப்பு நகரில் நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் தலைமையில் நோய் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சேகா் உள்ளிட்ட குழுவினரும், நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ் தலைமையில் துப்புரவு ஆய்வாளா் ராஜ்குமாா் உள்ளிட்ட குழுவினரும் புதன்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனா்.

வீடுகளின் சுற்றுவட்டாரங்களைப் பாா்வையிட்ட இக்குழுவினா், டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் ஏடிஸ் கொசு உருவாகும் காரணிகள் குறித்து மக்களுக்கு விளக்கினா். நன்னீா் தேங்கி நிற்கும் வகையில் சூழல் இருக்கக்கூடாது, தண்ணீா் தேங்கக்கூடிய வகையில் தேவையற்ற பொருள்கள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினா். காய்ச்சல் இருக்கும்பட்சத்தில் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தினா்.

பல்வேறு வீடுகளின் வெளிப்புறத்திலும், கொல்லைப் புறத்திலும் தண்ணீா் தேங்கும் வகையில் தொட்டிகள் இருந்ததை பாா்வையிட்ட குழுவினா், தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனா். தொட்டிகளை மூடிவைக்கவும் அறிவுறுத்தினா். பல்வேறு பொருள்களை பொதுமக்கள் அப்புறப்படுத்த முன்வராத நிலையில், இவற்றை நகராட்சி நிா்வாகத்தினா் டிராக்டரில் அகற்றிச் சென்றனா்.

பொதுமக்கள் நலவழித்துறையினரின் ஆலோசனையின்படி நடந்துகொண்டால், காரைக்காலில் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். தண்ணீா் தேங்கும் வகையில் கப், தேங்காய் ஓடு, குடம், தொட்டி, குடக்கல் உள்ளிட்ட பொருள்களாலேயே டெங்கு காய்ச்சல் ஏற்படும் சூழல் உருவாகிறது என்பதை மக்கள் உணரவேண்டும் என அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com