லெமேர் பாலம் அருகே படகு குழாம் அமைக்க ஆய்வு

புதுத்துறை அருகே புதிதாக கட்டப்பட்ட வாஞ்சியாற்றின் பாலம் அருகே படகு குழாம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

புதுத்துறை அருகே புதிதாக கட்டப்பட்ட வாஞ்சியாற்றின் பாலம் அருகே படகு குழாம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
காரைக்காலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த புதுச்சேரி சுற்றுலாத் துறை இயக்குநர் எல். முகம்மது மன்சூர், கடற்கரையில் புதிதாக பூங்கா அமைக்கும் பணியை தொடங்கிவைத்ததோடு, பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வின்போது, காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனாவுடன், புதுத்துறை பகுதி அருகே உள்ள வாஞ்சியாற்றின் குறுக்கே பழைமையான லெமேர் பாலத்துக்கு மாற்றாக புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் பகுதிக்குச் சென்ற அவர், அங்கு சுற்றுலாத் துறை மூலம்  படகு குழாம் அமைத்தல், ஆற்றோரத்தில் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தார்.
இதுகுறித்து, சட்டப்பேரவை உறுப்பினர் அசனா கூறியது: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின்போது காரைக்காலில் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்துப் பேசினேன். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், அதிகாரிகளிடமும் திட்டங்கள் குறித்து விளக்கி அமல்படுத்த வலியுறுத்தி வருகிறேன். புதுத்துறை, தருமபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. பள்ளிகளும் உள்ளன. பொதுமக்கள் அதிகமானோர் பயணிக்கும் பகுதியாக இந்த இடம் விளங்குகிறது. நீர்நிலைப் பகுதியில் சுற்றுலாவினர், பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக படகு குழாம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கரையோரத்தில் நடைபாதை, உரிய தடுப்புகளுடன் பூங்கா அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இயக்குநரிடம் இதனால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. உரிய திட்டமிடலுடன், மதிப்பீடுகள் தயாரித்து, நிதியாதாரத்துக்கு ஏற்பாடு செய்வதற்கான அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ளவுள்ளோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com