திருப்பட்டினம் கோயிலில்  நடராஜருக்கு ஆவணி திருமஞ்சன வழிபாடு

திருப்பட்டினம் ராஜசோளீசுவரர் கோயிலில் நடராஜருக்கு சிறப்புத் திருமஞ்சனம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பட்டினம் ராஜசோளீசுவரர் கோயிலில் நடராஜருக்கு சிறப்புத் திருமஞ்சனம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நடராஜப் பெருமானுக்கு ஆண்டில் 6 முறை சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது ஐதீகம். இவற்றில், மார்கழி, ஆனி மாதத்தில் நடைபெறும் அபிஷேகம் சிறப்புக்குரியதாகும். 
அதன்படி, ஆவணி மாத திருமஞ்சனத்தையொட்டி, காரைக்கால் பகுதி திருப்பட்டினத்தில் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீசுவரர் கோயிலில்,  சிவகாமி அம்மன் சமேத நடராஜப் பெருமானுக்கு வியாழக்கிழமை காலை பால், சந்தனம், மஞ்சள், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினர் செய்திருந்தனர். இதேபோல், காரைக்காலில் பல்வேறு சிவன் கோயில்களிலும் காலை நிகழ்வாகவும், மாலை நிகழ்வாகவும் நடராஜருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com