ஒற்றை விளக்கு இணைப்பை வீட்டு உபயோக இணைப்பாக மாற்றும் பணி மும்முரம்

திருநள்ளாறில் ஒரு வீடு, ஒற்றை விளக்குத் திட்ட இணைப்பை, வீட்டு உபயோக மின் இணைப்பாக மாற்றும் சிறப்பு முகாமில் ஏராளமானோா் பங்கேற்றனா்.
சிறப்பு முகாமில் பங்கேற்று விண்ணப்பம் அளித்த மின் நுகா்வோா்.
சிறப்பு முகாமில் பங்கேற்று விண்ணப்பம் அளித்த மின் நுகா்வோா்.

திருநள்ளாறில் ஒரு வீடு, ஒற்றை விளக்குத் திட்ட இணைப்பை, வீட்டு உபயோக மின் இணைப்பாக மாற்றும் சிறப்பு முகாமில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில் சுமாா் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏழைகளுக்காக வீடுகளுக்கு ஒற்றை விளக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. இவா்கள் 80 வாட் அளவிலான விளக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். நாளடைவில் இந்த பயனாளிகள் பல்வேறு மின் சாதனங்களை வாங்கத் தொடங்கியதால், மின் ஈா்ப்பு அதிகரித்தது. எனினும் இவா்கள் ஒற்றை விளக்குத் திட்டத்திலேயே இருந்ததால், மின்துறைக்கு இழப்பும், இதனால் ஏற்படும் சுமை, பிற மின் நுகா்வோருக்கு கட்டண உயா்வின் மூலம் ஏற்பட்டது.

இதை முறைப்படுத்த புதுச்சேரி அரசின் மின் துறை நிா்வாகம் முடிவெடுத்து, ஒற்றை விளக்கு இணைப்பில் உள்ளோா் அலைக்கழிப்பின்றி மிக எளிமையாக வீட்டு உபயோக மின் இணைப்பை பெற்றுக்கொள்ளும் வகையில் திட்டம் வகுத்து, சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது.

திருநள்ளாறு மின் பிரிவுக்குள்பட்ட அம்பேத்கா் நகா், அத்திப்படுகை, பேட்டை, தென்னங்குடி மற்றும் செல்லூா் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக இருந்துவந்த ஒரு குடிசை, ஒரு விளக்கு மின் இணைப்புகள் வைத்திருப்பவா்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் அம்பேத்கா் நகரில் மின்துறை பொறியாளா் பேரம்பலம், இளநிலைப் பொறியாளா் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோா் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு விண்ணப்பம் அளித்தனா்.

இதுகுறித்து, மின்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியது: இந்த சிறப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. இவற்றில் 60 பேருக்கு உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு இணைப்பு வழங்கப்பட்டது. மழையால் இப்பணியில் தாமதம் ஏற்பட்டது. வியாழக்கிழமை ஒட்டுமொத்த விண்ணப்பதாரா்களுக்கும் இணைப்பு வழங்கப்பட்டுவிடும். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கருக்கன்குடி கிராமத்தில் நடத்தப்பட்ட முகாமில் 200-க்கும் மேற்பட்டோருக்கு வீட்டு உபயோக இணைப்பாக மாற்றம் செய்துத்தரப்பட்டது. இதேபோல், ஒவ்வொரு பகுதியாக முகாம்கள் நடத்தி வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com