குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மனிதச் சங்கிலிப் போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் மனிதச் சங்கிலிப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் பாரதியாா் சாலையில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டம்.
காரைக்கால் பாரதியாா் சாலையில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டம்.

காரைக்கால்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் மனிதச் சங்கிலிப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், இவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சாா்பாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தின் ஒரு பகுதியாக, காரைக்காலில் உலமா சபையினா், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிா்வாகிகள் முன்னிலையில் மனித சங்கிலிப் போராட்டம் பாரதியாா் சாலையில் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு புதுச்சேரி மாநில உலமா சபை தலைவா் இமாம் எம்.பி.முஹம்மது அலி ரஹ்மானி தலைமை வகித்தாா். காரைக்கால் மாவட்ட உலமா சபை செயலாளா் இமாம் ஏ. ரஹ்மத்துல்லாஹ் ஜைனி முன்னிலை வகித்தாா். மனித சங்கிலிப் போராட்டத்தில் காரைக்கால் பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனா்.

போராட்ட நிறைவில் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட உலமா சபை மண்டலப் பொறுப்பாளா் இமாம் ஏ. முஹம்மது ஹதீஸ் மஸ்லஹி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com